News

சிறுவர்களுக்கான வாழ்வாதார உதவித்தொகை: அமைச்சரவை ஒப்புதல்.


நாடு முழுவதும் உள்ள அரசு, தன்னார்வ, மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் 356 சிறுவர்கள் மேம்பாட்டு மையங்களில் 2024 ஆம் ஆண்டு இறுதியில் சுமார் 9,191 சிறுவர்கள் நிறுவன பராமரிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழந்தைகள் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்தவர்கள், பெற்றோரின் பாதுகாப்பு இல்லாதவர்கள், அல்லது கைவிடப்பட்டு தடுப்பு மையங்களில் உள்ளவர்கள் ஆவர்.


இவர்களுக்கு உதவும் வகையில், 2025 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்காக ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டு, நிறுவன பராமரிப்பு அல்லது பாதுகாப்பில் உள்ள சிறுவர்கள் மற்றும் வீதியில் உள்ள சிறுவர்களுக்கு மாதம் ரூ. 5,000 உதவித்தொகை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சரால் முன்மொழியப்பட்ட இந்த திட்டத்தை நிலையாகவும் திறம்படவும் தொடர, அமைச்சு செயலாளர் தலைமையில், பிற தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளை உள்ளடக்கிய கண்காணிப்பு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.


உதவித்தொகை விநியோகம்:
ரூ. 5,000 உதவித்தொகையில், ரூ. 3,000 பிள்ளைகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் பிற நலன்புரி செலவுகளுக்காக, தேசிய  வங்கி மூலம் குழந்தைகளை பராமரிக்கும் மையம் அல்லது பாதுகாவலருக்கு வழங்கப்படும்.


மீதமுள்ள ரூ. 2,000 குழந்தையின் எதிர்கால நலனுக்காக, அவரது பெயரில் தேசிய சேமிப்பு வங்கியில் மாதந்தோறும் சேமிப்பு கணக்கில் வைப்பு செய்யப்படும்.


இந்த திட்டம் சிறுவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், அவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button