News
குறுகிய கால அழைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதியுடனான இன்றைய கலந்துரையாடலில் ரவுப் ஹக்கீம் கலந்துகொள்ள மாட்டார்.

குறுகிய கால அழைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதியுடனான இன்றைய கலந்துரையாடலில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் கலந்துகொள்ள மாட்டார் என சற்று முன்னர் சற்று முன்னர் மடவளை நியுசுக்கு அவர் உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பில் மடவளை நியுசுக்கு கருத்து வெளியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ,
மிக குறுகிய அழைப்பில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதேவேளை தாம் சில முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டி இருப்பதால் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் கலந்துகொள்ள இயலாது என அவர் குறிப்பிட்டார்.



