VIDEO > போர்வீரர்களை நினைவு கூறும் இடத்திற்கு செல்ல விமல் வீரவன்ச மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பதட்டம்

இலங்கையில் இன்று (18) போர்வீரர்களை (ரணவிரு) நினைவுகூரும் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்துவதற்குச் சென்ற முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அங்கு பெரும் பரபரப்பும் அமைதியற்ற சூழலும் ஏற்பட்டது.
VIDEO >> https://youtu.be/HZCzrLt9-CQ
எந்தவொரு நாட்டின் குடிமகனுக்கும் நாட்டைப் பாதுகாத்த மாவீரர்களை மலர் தூவி கௌரவிப்பதற்கும், நினைவு கூருவதற்கும் முழுமையான உரிமை இருக்க வேண்டும் எனத் தெரிவித்து, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாதுகாப்பு அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போரில் உயிர்த்தியாகம் செய்த இராணுவத்தினரை கௌரவிப்பதற்காக விமல் வீரவன்ச மற்றும் அவரது ஆதரவாளர்கள் மலர் வளையங்களுடன் சென்றிருந்த போது, பாதுகாப்புப் பிரிவினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த விமல் வீரவன்ச, நாட்டில் அமைதியை நிலைநாட்ட உயிரைத் தந்த எமது போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த சாதாரண குடிமக்களுக்கு உரிமை இல்லையா எனக் கேள்வி எழுப்பியதுடன், தமிழ் டயஸ்போராவின் அழுத்தங்களுக்கும், அவர்களின் மனக்கசப்பிற்கும் பயந்து கொண்டே அரசாங்கத்தினால் இவ்வாறான முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்றும் குற்றம் சாட்டினார்.
புலம்பெயர் அமைப்புகளின் அதிருப்தியைச் சம்பாதிக்கக் கூடாது என்ற நோக்கில், சொந்த நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு அதிகாரிகள் முன்னுரிமை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை விமல் வீரவன்ச தரப்பு பலமாக முன்வைத்துள்ளது.

