News

நாளை ஈரான் மீது தாக்குதல் நடத்ததான் இருந்தோம்… ஆனால் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம் – சரிவராவிட்டால் உடனடியாக தாக்குமாறு இராணுவத்திற்கு  உத்தரவிட்டுள்ளேன் ; ட்ரம்ப்

ஈரான் மீது நடத்த திட்டமிட்டிருந்த தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.



யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்படிக்கையொன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



இதுதொடர்பில் கருத்து தெரிவித்த ட்ரம்ப்,



“நாளை ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதலை தற்காலிகாக நிறுத்துமாறு அமெரிக்க இராணுவத்துக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.



ஆனால், உடன்படிக்கையொன்றை எட்டமுடியாமல் போகும்பட்சத்தில் உடனடி அறிவித்தலின் மூலம் ஈரான் மீது பாரியளவிலான தாக்குதலை நடத்துவதற்கு தயாராக இருக்குமாறு அவர்களுக்கு மேலும் உத்தரவிட்டுள்ளேன்”என தெரிவித்துள்ளார்.



இருப்பினும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் உடன்படிக்கையின் விபரம் குறித்து அவர் எதுவும் வெளியிடவில்லை.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button