அல் ஹாபிழ் நஸீர் அஹமட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஏறாவூர் தாருல் உலூம் அரபுக் கல்லூரியின் ஹாபிழ்கள் மற்றும் ஆலிம்களுக்கான அல்குர்ஆன் உயர் கற்கைநெறியின் ஆரம்ப நிகழ்வு

ஹாபிழ்கள், ஆலிம்களுக்கான அல்குர்ஆன் உயர் கற்கைநெறி ஆரம்ப நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
ஏறாவூர் தாருல் உலூம் அரபுக் கல்லூரி யில் ஹாபிழ்கள் மற்றும் ஆலிம்களுக்கான அல்குர்ஆன் உயர் கற்கைநெறியின் ஆரம்ப நிகழ்வு இன்று (23.05.2026) வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வு, இக் கல்லூரியின் இஸ்தாபகர் அல் ஹாஜ், அல் ஹாபிழ் Z.A. நஸீர் அஹமட் அவர்களின் தலைமையிலும், கல்லூரியின் பணிப்பாளர் அஷ் ஷெய்க், அல் ஹாபிழ் A.K. சுஹைல் அஹமட் (மஜீதி) அவர்களின் ஒருங்கிணைப்பிலும் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக அஷ்ஷேக், அல் ஹாபிழ், அல் காரி பிர்னாஸ் நவாஸ் (ஷாபிஈ) அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
மேலும் பல உலமாக்கள், ஹாபிழ்கள், குர்ஆன் கல்வியாளர்கள் மற்றும் சமூக முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
🕌📚 அல்குர்ஆன் கல்வி வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்படும் இத்தகைய உயரிய முயற்சிகள் சமூகத்திற்கு பெரும் பயனளிக்க இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.










