News

பிலிப்பைன்ஸில் இன்று  காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்து 129 பேர் காயமடைந்தனர்

பிலிப்பைன்ஸில் இன்று (08) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



மேலும், இந்த அனர்த்தத்தில் 129 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மனிய புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.



நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் அண்டை நாடான இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் இந்தோனேசியாவுக்கான எச்சரிக்கை நீக்கப்பட்டது.



இதனிடையே, நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button