News

சுரேஷ் சாலேக்கு ஆதரவாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன் இடம்பெறும் போராட்டத்தில் ஜீன் குழப்பம்

இராணுவப் புலனாய்வுத் துறையின் (SIS) முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே அநீதியான முறையிலும், மனிதாபிமானமற்ற ரீதியிலும் நடத்தப்படுவதாகக் கண்டித்து, பல எதிர்க்கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்புப் போராட்டம் ஒன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதில் கலந்துகொண்டிருப்பவர்கள் சுரேஷ் சல்லேயின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

அதிலிலொரு பெண், புலிக்கு பாலூட்டும் அனுரகுமார என உரத்த குரலில் சத்தமிட்டார். வேறும் சிலரும் அரசுக்கும் பாதுகாப்பு துறைக்கும் எதிராக கோஷங்களை எழுப்பி வந்தனர் .

இந்நிலையில், சத்தியாக்கிரகத்துக்கு வந்த பிரபல போராட்ட பங்குபற்றாளர் ஜீன் ஆண்டியால் அங்கு சலசலப்பு ஏற்பட்டு அவரை அங்கிருந்தவர்கள் விரட்டிவிட்டனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button