News

சுரேஷ் சல்லேவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சத்யாகிரகப் போராட்ட கூடாரம் அகற்றப் பட்டது

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக, முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சல்லேவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சத்யாகிரகப் போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தை பொலிஸார் அகற்றியுள்ளனர்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிமித்தம் அண்மையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்ட சல்லேவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் மனிதாபிமானமற்ற அச்சுறுத்தல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல எதிர்க்கட்சிகள் இன்று (08) இந்த சத்யாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தன.


பொலிஸாரால் கூடாரம் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button