அமைதிப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.. ஈரானை உலக வரைபடத்திலிருந்து அழிப்போம்.. – டிரம்ப் ஆவேசம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீறியுள்ளதற்குப் பதிலடியாக, அந்நாட்டின் ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்பு கிடங்குகள், மற்றும் கடலோர ரேடார் மையங்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தனது சமூக ஊடக கணக்கு மூலம் அவர் விடுத்துள்ள சிறப்பு அறிக்கையில், ஈரான் தொடர்ந்து ஒப்பந்தங்களை மீறி வருவதை வலியுறுத்தியுள்ளார். ஈரான் விஷயத்தில் இனியும் நியாயமாகவோ அல்லது பொறுமையாகவோ செயல்பட முடியாத ஒரு இக்கட்டான நிலைக்குத் தான் வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்படியே நிலைமை நீடித்தால், தான் மிக வெற்றிகரமாகத் தொடங்கிய இராணுவ நடவடிக்கையை முழுமையாக முடிக்க அமெரிக்காவுக்கு நேரிடும் என்று டிரம்ப் கூறியுள்ளார். “அப்படி நடந்தால், ஈரான் இஸ்லாமிய குடியரசு இனி உலக வரைபடத்தில் இருக்காது” என்று அவர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த அறிக்கையைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே முழு அளவிலான போர் மூளும் அபாயம் உயர்ந்துள்ளதாகவும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

