News

சிலோன் கிறீன் லைப் பிளான்டேசன்  காரைதீவு கிளையினால்  மரக்கன்றுகளை விநியோகிக்கும் பசுமை வருகை வேலைத்திட்டம்


————————————
சிலோன் கிறீன் லைப் பிளான்டேசன்  நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான கலாநிதி மாலன் பிரான்சிஸ் பீட்டர்ஸின் எண்ணக்கருவில் உருவான இலங்கையில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை விநியோகிக்கும் ‘பசுமை வருகை’ வேலைத்திட்டத்தில் கல்முனை பிராந்தியமும்  இணைந்து கொண்டது. இத்திட்டமானது மனிதவள பணிப்பாளர் திருமதி இரேஷா நிமந்திகா விக்கிரமசிங்க வழிகாட்டலில் பொசோன் தினத்தை முன்னிட்டு தான சாலைக்குப் பதிலாக நாடளாவிய ரீதியில் கடந்த சனிக்கிழமை காலை மரக்கன்றுகள் விநியோகம் வெற்றிகரமாக நடைபெற்றது.
அந்த வகையில்   கல்முனை வலய  உதவி பொதுமுகாமையாளர் மூ.மதன் அவர்களின் வழிகாட்டலில்  காரைதீவுக் கிளையினால் அதன் பிராந்திய முகாமையாளர் திரு ஆர். விக்னேஷ்வரன்  தலைமையில் மாதுளை மற்றும் கொய்யா கன்றுகள்  பயனாளிகளுக்கு பொசோன் தானமாக வழங்கி வைக்கப்பட்டது் இந் நிகழ்வில் வலய முகாமையாளர் திரு.கே. துவாரகேஷ் ,பிராந்திய முகாமையாளர் எஸ். ரீ.எம்.சியாட் மற்றும் கிளை முகாமையாளர்கள் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button