ஈரானில் ஒரு வார கால இறுதி ஊர்வலங்களுக்குப் பிறகு, அயதுல்லா அலி கொமெய்னியின் ஜனாஸா இன்று நல்லடக்கம்
ஈரான் ஆன்மீகத் தலைவர் தலைவர் அயதுல்லா அலி கொமெய்னியின் உடல், ஒரு வார கால இறுதி ஊர்வலங்களுக்குப் பிறகு, இன்று (9) வடகிழக்கு ஈரானில் உள்ள மஷ்ஹத் நகரின் புனிதமான வழிபாட்டுத் தலத்தில் அடக்கம் செய்யப்படுகின்றது.
இதற்கிடையில், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை நிலைநாட்டுவதாகக் கூறி, அமெரிக்கப் படைகள் ஈரான் மீது இரண்டாவது நாளாக புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாக்குதலுக்கு உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ள ஈரானியப் புரட்சிகரக் காவலர்கள் மற்றும் இராணுவம், குவைத், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்களின் முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து ட்ரோன் மூலம் தீவிரத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளன.
இதனால் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி கொல்லப்பட்ட இத்தாக்குதலில் காயமடைந்த அவரது மகனும் வாரிசுமான மொஜ்தபா கொமெய்னி இன்னும் பொதுப் பார்வையில் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



