News

காதலிப்பதாக நடித்து, தாயாருடன் சேர்ந்து பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்… ஏமாற்றப்பட்ட ஆண் ஒருவரின் க*த்திக்கு*த்துக்கு இலக்காகி உயிரிழப்பு

பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் நதுனி சஹஷ்ரி என்ற இளம்பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண் அந்த வீட்டில், திருமணம் செய்து கொள்ளாமல் 27 வயதுடைய இளைஞர் ஒருவருடன் வாழ்ந்து வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.



பாணந்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சமையல் உதவியாளராகப் பணியாற்றிய இளைஞன், சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகியிருந்தார். இந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இளம் பெண் படுகொலை
சம்பவம் நடந்த இரவு, தான் பணிபுரிந்த இடத்திலிருந்து சுமார் நான்கரை கிலோமீட்டர் தூரம் நடந்து வந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.



இரவு 11.15 மணியளவில் பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது தங்கை மற்றும் தாயாரையும் மிகவும் மோசமான முறையால் திட்டியதாலும் ஏற்பட்ட கடும் கோபத்தில், கத்தியால் அவர் நதுனியின் நெஞ்சில் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொலையின் பின்னர் தானும் உயிரை மாய்த்துக் முயன்று தோல்வியடைந்ததால், வீட்டில் இருந்த திரவத்தை அருந்தியுள்ளார்.

பின்னர் ஆடைகளை மாற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மொரட்டுவ ரயில் நிலையத்திற்கு சென்ற சந்தேக நபர், கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்ற ரயிலின் முன்னால் பாய்ந்து உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.

இதில் அவரது வலது கால் மற்றும் விலா எலும்புகள் உடைந்து பலத்த காயமடைந்தார். பொதுமக்களால் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

2 நாட்கள் தேடுதலுக்கு பின்னர் தேசிய வைத்தியசாலையிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் அவரை கைது செய்தனர். மாளிகாகந்த நீதவான் வைத்தியசாலைக்குச் சென்று சந்தேக நபரைப் பார்வையிட்டார்.

அவர் தற்போது கடுமையான காயங்களுடன் உயிருக்குப் போராடி வருகிறார்.

பணம் பறிக்கும் மோசடி
இதேவேளை, நதுனியும் அவரது தாயாரும் நீண்டகாலமாக இளைஞர்களை காதலிப்பதாக நடித்து, பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



இந்தச் சம்பவம் குறித்து அறிந்த வவுனியாவை சேர்ந்த நபர் ஒருவர், இந்தத் தாயும் மகளும் சேர்ந்து தம்மிடம் 15 லட்சம் ரூபாவை மோசடி செய்ததாக பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.

நதுனி இதற்கு முன்னர் விமானி ஒருவருடனும் நிச்சயதார்த்தம் செய்திருந்தமை தெரியவந்துள்ளது. சந்தேக நபருடன் வசிக்கும்போதே, நதுனி மற்றொரு சமையல் கலைஞருடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

அவரிடமிருந்தும் சுமார் 10 லட்சம் ரூபாவை தாய் மற்றும் மகள் சேர்ந்து மோசடி செய்துள்ளனர். நதுனியின் தாயார், மகளின் பாதுகாப்பில் அக்கறை கொண்ட ஒரு பாசமான தாயாக நடித்து, இளைஞர்களை ஏமாற்றி வந்துள்ளார்.

தாயின் தவறான வழிகாட்டலால் உயிரிழந்த நதுனியின் சடலத்தை அவரது தாயாரே பொறுப்பேற்றுக்கொண்டார். சந்தேக நபரான இளைஞர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button