News
உத்தர் பிரதேச ஜான்பூரின் ராஸ் மண்டல் கோவிலில் உள்ள ஜெகந்நாதப் பெருமானுக்கு மருத்துவர்கள் குழுவால் உடல்நலப் பரிசோதனையை மேற்கொள்ளப் பட்டது – முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக வைத்தியர்களால் அறிவிக்கப்பட்டது.
ரத யாத்திரையை முன்னிட்டு, 15 நாட்கள் நடைபெற்ற Anavasara சடங்குக்குப் பிறகு, உத்தர் பிரதேச ஜான்பூரின் ராஸ் மண்டல் கோவிலில் உள்ள ஜெகந்நாதப் பெருமானுக்கு மூத்த மருத்துவர்கள் குழுவினர் முறைப்படியான உடல்நலப் பரிசோதனையை மேற்கொண்டனர்.
பாரம்பரிய பரிசோதனை முறைகளைப் பின்பற்றி, மகா ரதத் திருவிழா தொடங்குவதற்கு முன்பாக, பெருமான் குணமடைந்த காலத்தின் முடிவைக் குறிக்கும் வகையில், அந்த பெருமான் “முழு ஆரோக்கியத்துடன்” இருப்பதாக வைத்தியர்களால் அறிவிக்கப்பட்டது.



