News
எதிர்க்கட்சியை முற்றாக அகற்றி விடுவோம் என அரச தரப்பில் கூறுவதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் ; நாமல்

எதிர்க்கட்சியை அகற்றிவிடலாம் என அரசாங்கம் நினைத்தால் அது பெரும் தவறான எண்ணமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பிரதி அமைச்சர் ஒருவர் எதிர்க்கட்சியை முற்றிலும் அகற்றிவிட்டதாகவும், மீதமுள்ளவற்றையும் விரைவில் அகற்றிவிடுவோம் என்றும் கூறுவது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கூற்று என அவர் சாடினார்.
அத்துடன் நீதித்துறையின் நியமனங்களை அல்லது நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதன் மூலம் அரசாங்கம் தனது குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முற்படுவதாகவும், அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் எதிர்க்கட்சியை ஒடுக்க முடியாது என்றும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.


