News

தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுக்கும் உத்தரவை கோரியுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, சற்றுமுன் நீதிமன்றத்தில் ஆஜரானார்

தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுக்கும் உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனை இன்று (23) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.



இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று நேரத்திற்கு முன்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.



இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 9ஆம் திகதி நான்காவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, மேலதிக பரிசீலனைக்காக இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.



குறித்த மனு தொடர்பான மேலதிக விசாரணைகள் இன்று தொடரவுள்ளன

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button