News
வர்த்தகப் பற்றாக்குறை 5.5 பில்லியன் டொலராக உயர்வு!

இந்த ஆண்டின் (2026) முதல் ஆறு மாதங்களில் வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை (ஏற்றுமதி வருவாயை விட இறக்குமதிச் செலவு அதிகரிப்பு) குறிப்பிடத்தக்க வகையில் 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக விரிவடைந்துள்ளது.
ஏற்றுமதி வருவாயின் வளர்ச்சியை விட இறக்குமதிச் செலவுகள் வேகமான விகிதத்தில் அதிகரித்ததன் காரணமாகவே இந்த வர்த்தகப் பற்றாக்குறை உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டின் (2025) முதல் ஆறு மாதங்களில் வர்த்தகப் பற்றாக்குறை 3.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக நிலவியது குறிப்பிடத்தக்கது.


