News
குருவிட்ட சிறைச்சாலை அப்டேட்… இருவர் உயிரிழப்பு – நான்கு பேர் காயம்

குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கைதிகள் 4 பேர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட ஆரம்பக்கட்ட பதற்றம், சிறை அதிகாரிகளால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும், வெள்ளிக்கிழமை காலையில் மீண்டும் கலவரம் வெடித்தது.
இந்த அமைதியின்மையின் போது, கைதிகள் சிலர் சிறை மருத்துவமனையை சேதப்படுத்தியதாகவும், பல கைதிகள் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலைமையைக் கட்டுப்படுத்தி, சிறை வளாகத்திற்குள் மீண்டும் அமைதியை ஏற்படுத்த அதிகாரிகள் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.



