
போலி பணத்தாள்களை அச்சிட்டதாகக் கூறப்படும் 53 வயதுடைய நபரொருவர் மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிரிஹானை கோட்டை வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, 5,000 ரூபாய் பெறுமதியான ஏழு போலி பணத்தாள்கள், 1,000 ரூபாய் பெறுமதியான ஆறு போலி பணத்தாள்கள் மற்றும் 500 ரூபாய் பெறுமதியான ஒரு போலி பணத்தாள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், ஒரு கணினி, ஸ்கேனர் மற்றும் போலி பணத்தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பல்வேறு உபகரணங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன



