News

மத  கலாச்சாரங்களைப் பேணி சீருடையை அணிய அனுமதி மறுக்கும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் – அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் பணிப்பாளருக்கு எதிராக களத்தில் இறங்கியது சமூக நீதிக்கட்சி

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமனம் பெற்ற 9 சுகாதார உதவியாளர்களுக்கு மத, கலாச்சாரங்களைப்பேணி சீருடையை அணிய வைத்தியசாலையின் பணிப்பாளரினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கான சீருடை குறித்த சுற்றுநிருபத்தில் மத, கலாச்சாரங்களைப்பேணி சீருடையை அணிவது தெளிவாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

அப்படி அணியும் போது பின்பற்ற வேண்டிய வரையறைகள் பற்றியும் சுற்று நிறுபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்தத சுற்று நிறுபத்திற்கு முரணாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இது குறித்த முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றதை அடுத்து சமூக நீதிக்கட்சியின் தலைவர் அர்க்கம் முனீர், பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷாத் அஹமத், பொருளாளர் சட்டத்தரணி இல்ஹாம் ஹஸனலி, தேசிய அமைப்பாளர் இர்பான் பன்னா மற்றும் டிஜிட்டல் ஊடக செயலாளர் ஸப்ரீன் அஹமத் ஆகியோர் நேரடி கள விஜயமொன்றை நேற்று (09.08.2026) மேற்கொண்டனர். இதன் போது இப்பிரச்சினையை தீர்க்க முன்னின்று செயற்பட்டு வரும் நற்பிட்டிமுனை அல் அக்ஸா பாடசாலையின் அதிபர் பதியுதீன் அவர்களும் கலந்துகொண்டார்.

இதன்போது பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களை சந்தித்து பிரச்சினையை கேட்டறிந்து கொண்டதுடன் அவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டதற்கான எழுத்து மூல பதிலொன்றை பணிப்பாளரிடம் பெற்றுக்கொள்ளுமாறு வழிகாட்டப்பட்டது. அத்துடன் உடனடியாக மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்றை மேற்கொள்வதற்கான முயற்சிகளையும் முன்னெடுக்கப்பட்டது. அத்தோடு இந்த பிரச்சினையை சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் நேரடி கவனத்திற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் சமூக நீதிக் கட்சி மேற்கொண்டு வருகிறது.

VIDEO >> கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் சுகாதார உதவியாளர்களின் சீருடைப் பிரச்சினை – களத்தில் இறங்கியது சமூக நீதிக் கட்சி!*

வீடியோ: https://drive.google.com/file/d/1QXetYpgtQhosVOHASghs5Egov5a_BXK8/view?usp=sharing

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button