தன்னுடன் காதல் உறவில் இருந்த போது எடுத்த பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யப் போவதாக அச்சுறுத்தல் விடுத்த குற்றத்தில் பௌத்த பிக்கு ஒருவர் பொலிஸாரால் கைது

இளம் பெண்ணின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்போவதாக அச்சுறுத்தல் விடுத்ததாக சந்தேகிக்கப்படும் பௌத்த பிக்கு ஒருவர் உடுகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கனிஷ்ட பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் 33 வயதுடைய பௌத்த பிக்கு என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் இச்சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, சம்பந்தப்பட்ட இளம் பெண்ணுடன் காதல் உறவில் இருந்த போது இருவரும் தொலைபேசி மூலம் தனிப்பட்ட காணொளிகளை பரிமாறிக்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இருப்பினும் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் அந்தக் உறவு கைவிடப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரான பௌத்த பிக்கு, இளம் பெண்ணின் குறித்த தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் குறித்த இளம் பெண்ணால் பொலிஸில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாகச் செயற்பட்ட உடுகம பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.



