News
புத்த மதத்துக்கு கைவைக்க முயற்சிக்க வேண்டாம்; அப்படி செய்தால் அரசாங்கம் வீட்டுக்குத்தான் போக வேண்டி வரும் ; அக்மீமன தயாரதன தேரர் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை

புத்த மதத்துக்கு கைவைக்க தயாராக வேண்டாம்; அப்படி நடந்தால் வீட்டிற்குத்தான் போக வேண்டி வரும் – அக்மீமன தயாரதன தேரர் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை
கடந்த காலத்திலிருந்தே புத்த மதத்திற்கோ அல்லது பௌத்த பாரம்பரியங்களுக்கோ சேதம் விளைவிக்க முயன்ற எந்தவொரு தலைவராலும் முன்னோக்கிச் செல்ல முடியாமல் போனது என்றும்,
அதனால் தற்போதைய ஜனாதிபதியும் புத்த மதத்தைத் தொட முயலக்கூடாது என்றும் சிங்கள ராவய அமைப்பின் தலைவர் பூஜ்ய அக்மீமன தயாரதன தேரர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர் மேலும் வலியுறுத்துகையில், ஒருவேளை அரசாங்கம் புத்த மதத்திற்கோ அல்லது சாசனத்திற்கோ பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட்டால், ஜனாதிபதி உட்பட அரசாங்கத்திற்கும் வீட்டிற்குப் போக வேண்டிய நிலைமையே ஏற்படும் எனக் குறிப்பிட்டார்.



