News

பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்த அனைத்து கட்சிகளும் சம்மதம்.. ஆனாலும் தேர்தல் இல்லை..

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவது தொடர்பாக அரசாங்கம் ஒரு அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என ‘பஃப்ரல்’ (PAFFREL) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

பழைய முறையிலேயே இத்தேர்தலை நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் உடன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், அரசாங்கம் அதைத் தவிர்த்துச் செயல்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் தேர்தல்களை நடத்துவதற்காகப் போராடிப் பங்களித்ததுடன், அவர்களின் கொள்கைப் பிரகடனத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்துவது நாட்டின் மக்களின் வாக்குரிமைக்கு அளிக்கும் மரியாதையாக அமையும் என்றும் அவர் கூறினார்.

“தற்போதுள்ள மாகாண சபை முறைமை சரியில்லை என்றால், அதை ரத்து செய்வதற்கு அரசியலமைப்புத் திருத்தத்திற்குச் செல்ல வேண்டும். இல்லையெனில், தற்போதுள்ள முறையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும். அரசாங்கம் ஏதேனுமொரு வகையில் அதற்குத் தயாராக இருந்தால், மிகக் குறுகிய காலத்தில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும்.

தேர்தலை நடத்துவதற்காக தற்போது இரண்டு தனிநபர் மசோதாக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு எதிர்க்கட்சியும் தொடர்ந்து தலையிட வேண்டும். அதற்காக மீண்டும் மீண்டும் தனிநபர் மசோதாக்களைக் கொண்டுவரும் வாய்ப்பு உள்ளது. மிகவும் முக்கியமானது என்னவெனில், தேர்தல்களை நடத்துவதில் அரசாங்கம் ஜனநாயகப் பண்புடன் நடந்துகொள்வதே ஆகும்” என்று அவர் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button