NPP அரசின் மக்கள் ஆதரவு 50% ஆக சரிந்தது: பொருளாதாரம் குறித்தும் நம்பிக்கையற்ற எதிர்பார்ப்புகள்

‘வேரிட்டே ரிசர்ச்’ (Verité Research) நிறுவனம் ‘வேன்கார்ட் சர்வே’ (Vanguard Survey) அமைப்புடன் இணைந்து நடத்திய அண்மைக்கால “நாட்டின் மனநிலை” (Mood of the Nation) கருத்துக்கணிப்பின்படி, தற்போதைய அரசின் ஆதரவு மற்றும் பொருளாதார குறிகாட்டிகளில் கணிசமான வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
2025 பிப்ரவரி மற்றும் 2026 பிப்ரவரி மாதங்களில் முறையே 62% மற்றும் 65% ஆக உயர் மட்டத்தில் காணப்பட்ட அரசின் ஆதரவு (Government Approval), தற்போது (2026 ஜூலை) 50% ஆகக் குறைந்துள்ளது. இது 15% வீழ்ச்சியைக் காட்டுகிறது.
நாட்டின் பொருளாதார நிலை குறித்தும் மக்களின் கருத்து மாறியுள்ளதுடன், முன்னர் 57% ஆக இருந்த பொருளாதார நிலை (State of the Economy) குறித்த சாதகமான பார்வை 38% ஆகக் குறைந்துள்ளது.
மேலும், எதிர்கால பொருளாதார எதிர்பார்ப்புகள் (Economic Outlook) நன்மையடையும் என நம்பிய 64% வீதம் 42% ஆக சரிவடைந்துள்ளதுடன், ஒட்டுமொத்த திருப்தியும் (Satisfaction) 59% இலிருந்து 38% ஆகக் குறைந்துள்ளதாக இந்த புதிய ஆய்வறிக்கை வெளிப்படுத்துகிறது.
#HiruNews #HiruNewsLK #TruthAtAllCosts



