News
ஈஸ்டர் தா**க்குதல் வழக்கு விசாரணை நிறைவு பெற்றது – தீர்ப்பை செப்டம்பர் 22 ஆம் திகதி வழங்க கொழும்பு விசேட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்தது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்காக எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதியை மூவரடங்கிய கொழும்பு விசேட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது.
வழக்கு விசாரணையின்போது சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் இரு தரப்பு வாதங்களை பரிசீலித்த பின்னர், நீதிமன்றம் எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதி தனது தீர்ப்பை அறிவிக்கவுள்ளது.



