News

வரலாற்றிலேயே அதிக பொய்களைக் கூறிய தலைவர் அனுர குமார திஸாநாயக.. இன்னமும் பொய் கூறிக்கொண்டிருக்கிறார்..

அரசின் அமைச்சர்களுக்கு எல்லையற்ற அழுத்தம் நிலவுகிறது; குறிப்பாக இந்த 22-வது திருத்தத்தைக் கொண்டுவந்து அதை நிறைவேற்ற முற்படும் போது. வழக்கறிஞர்கள் சங்கம், மேல் நீதிமன்றங்களின் கௌரவ நீதிபதிகள், காமன்வெல்த் வழக்கறிஞர்கள் சங்கம், ஆசிய வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் இலங்கையின் தொழில்முறை வல்லுநர்கள் என அனைவரையும் பகைத்துக்கொண்டு இந்த 22-வது திருத்தத்தை நிறைவேற்றப் பார்க்கிறார்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தங்கல்லையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ:

“ஹம்பாந்தோட்டை மாவட்டம், அங்குணகொளபெலஸ்ஸவில் உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததையையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நாம் இன்று கிராமம் கிராமமாகச் சென்று கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் இலங்கையின் பல மாவட்டங்களுக்கு நமது கட்சியாகக் கிராமம் கிராமமாகச் சென்றோம். கடந்த தேர்தல்களில் நம்மை விட்டு விலகிச் சென்ற பெருந்திரளான மக்கள், இன்று மீண்டும் நமது முகாமோடு கை கோர்ப்பதை நாம் காண்கிறோம். ஒருபுறம் நம் மீதான நம்பிக்கை, மறுபுறம் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையின்மை.

வரலாற்றிலேயே அதிக பொய்களைக் கூறிய ஒரு அரசாங்கம் இருக்குமானால், ஆட்சிக்கு வரப் பொய் சொன்ன ஒரு நபர் இருக்கிறார் என்றால், ஆட்சிக்குப் பொய் சொல்லி வந்து அதிகாரத்தில் நீடித்திருக்கவும் பொய் சொல்லும் ஒருவர் இருக்கிறார் என்றால், அவர்தான் நமது தற்போதைய அதிமேதகு ஜனாதிபதி.

அளவற்ற பொய்களைச் சொன்னார். சேற்ற வாரிப் பூசினார். இளைஞர் சமுதாயத்திற்குப் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்தார். பொய் வாக்குறுதிகளைக் கொடுத்தது மட்டுமன்றி, ஆட்சிக்கு வந்து அந்த அனைத்து எதிர்பார்ப்புகளையும் தவிடுபொடியாக்கும் வகையில் செயல்பட்டார்.

பொதுவாக மக்களுக்க ஒரு அரசாங்கத்தை வெறுக்க சில காலம் செல்ல வேண்டும். அப்படித்தானே?

ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே மக்களுக்கு வெறுத்துவிட்டது. காரியம் தலைகீழாக இருக்கிறது. பட்டதாரி இளைஞர்கள் வேலை கேட்டுச் சென்றால், அவர்களை அடித்து விரட்டினார்கள். 12 லட்சத்திற்கு வாகனம் வாங்கச் சென்றனர் இளைஞர்கள். என்ன கார்? ‘விட்ஸ்’ (Vitz) கார். கடைசியில் என்ன நடந்தது? அப்படி ஒன்று சொல்லவே இல்லை என்று மறுக்கும் நிலைக்கு வந்தார்கள். மலிவு விலையில் ஜப்பானிய பைக் வாங்கச் சென்றார்கள்.

விவசாயியின் ஒரு கிலோ நெல்லை 150 ரூபாய்க்கு மேல் விற்றுத் தருவதாகச் சொன்னார்கள். இப்போது விற்கவும் வழியில்லை. அரசாங்கம் அறுவடை காலத்தைப் பார்த்து வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்கிறது. நெல்லை விற்க முடிகிறதா? இப்போது அரசாங்கத்தில் இருப்பது சிறு குழந்தைகள். இதைப் புரிந்துகொள்ள முடியாத சிலர் இருக்கிறார்கள். அரசாங்கம் இப்போது அப்படித்தான் நடந்துகொள்கிறது.

இந்த ஊடக சகோதரர்கள் வந்து மைக்கைப் பிடிக்கும்போது, மைக்கைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள். அந்தச் சிறு குழந்தைகளுக்குப் பால் பாட்டிலைக் கொடுத்தால் முகத்தைத் திருப்பிக் கொள்வது போல், மைக்கைப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள். இன்று குழந்தைகளைப் போல் நடந்துகொள்கிறார்கள். எங்களுக்குத் தெரியும், அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு எல்லையற்ற அழுத்தம் இருக்கிறது; குறிப்பாக இந்த 22-வது திருத்தத்தைக் கொண்டுவந்து அதை நிறைவேற்ற முற்படும் போது. வழக்கறிஞர்கள் சங்கம், மேல் நீதிமன்றங்களின் கௌரவ நீதிபதிகள், காமன்வெல்த் வழக்கறிஞர்கள் சங்கம், ஆசிய வழக்கறிஞர்கள் சங்கம், இலங்கையின் தொழில்முறை வல்லுநர்கள் என அனைவரையும் பகைத்துக்கொண்டு இந்த 22-வது திருத்தத்தை நிறைவேற்றச் செல்கிறார்கள்.

ஜனாதிபதிக்கு அதை நிறைவேற்ற வேண்டும் என்று கூறுகிறார். பாவமய்யா அமைச்சர், ஜனாதிபதி சொல்வதையெல்லாம் செய்ய முயற்சிக்கிறார். எங்களுக்குப் புரிகிறது, அமைச்சர் சிலவேளைகளில் மனதளவில் விழுந்துபோயிருக்கலாம். மைக் ஒன்றைக் கண்டால் கோபம் வருவது நியாயம்தான். ஏனென்றால் அந்த மனிதரால் தாங்கக்கூடிய எல்லை என்று ஒன்று இருக்கிறது. நாடகம் நடித்துக்கொண்டிருந்த ஒருவரைக் கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் போட்டால், படம் எடுத்து, நடித்து, பொழுதுபோக்கிக் கொண்டிருந்த ஒருவரைக் கொண்டுவந்து இந்த அமைச்சர் பதவியைக் கொடுத்தால் அந்தச் சிரமம் தெரியத்தானே செய்யும்.

ஆனால் அதற்கு நாட்டின் மக்கள் பழி கிடையாது.

விவசாய அமைச்சரிடம் விவசாயத்தைப் பற்றிக் கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியவில்லை என்பதற்காக விவசாயிகள் பழி கிடையாது. கல்வி அமைச்சரிடம் கல்வி பற்றியோ, தேர்வு பற்றியோ, ஆசிரியர் இடமாற்றம் பற்றியோ, பள்ளியின் உள்கட்டமைப்பு பற்றியோ கேள்வி கேட்டால் பிரதமருக்கு இருக்கும் அழுத்தத்திற்கு மக்கள் தண்டனை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை. மக்கள் அதைவிட அதிக அழுத்தத்தையே அனுபவிக்கிறார்கள். விவசாயிகள் அதைவிட அதிக அழுத்தத்தில் இருக்கிறார்கள். இளைஞர்கள் அதைவிட அதிக அழுத்தத்தில் வாழ்கிறார்கள்.

அரசாங்கம் இதற்குப் பதிலளிக்க வேண்டும். அரசாங்கம் இந்தப் பிரச்சினைகளுக்குப் பதிலளிக்க வேண்டுமே தவிர, பிரச்சினைகளிலிருந்து தப்பிப்பது, ஒளிவது, மிரட்டுவது, பயமுறுத்துவது, வழக்கு போடுவது, நீதிமன்றத்தைக் காட்டுவது, சிறைச்சாலையைக் காட்டுவது, பொலிஸாரைக் கொண்டு அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துவது… இல்லை, அந்த விளையாட்டுகள் எல்லாம் சரிவராது. அரசாங்கம் தனது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். முடியாவிட்டால் ‘எங்களால் இதைச் செய்ய முடியாது’ என்று அரசாங்கம் சொல்ல வேண்டும். பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது.

இன்று ஒருபுறம் துறைமுகத்தில் கண்டெய்னர்கள் தப்பவைக்கப்படுகின்றன. துறைமுகத்திலிருந்து ஒரே நேரத்தில் மூன்று, நானூறு கண்டெய்னர்களை எப்படித் தப்பவைப்பது என்று நாங்களும் யோசித்துப் பார்த்தோம். ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பவர் கண்டெய்னர்களைத் தப்பவைத்து அனுபவம் உள்ளவர்…”

Recent Articles

Back to top button