News
நேற்று தனியார் வகுப்புக்குச் சென்றபோது காணாமல் போயிருந்த பலாங்கொடை பிரதேச 17 வயது மாணவிகள் மூவரும் கண்டி ஊடாக திருகோணமலை சென்றடைந்த காணொளி வெளியானது – மூவரையும் தேடும் நடவடிக்கை தொடர்கிறது

பலாங்கொடை, பின்னவல – எல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய கௌசல்யா, சர்மிளா மற்றும் சதுனி ஆகிய மூன்று பாடசாலை மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை (31) தனியார் வகுப்புக்குச் சென்றபோது காணாமல் போயிருந்தனர். இது குறித்து பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த மூன்று மாணவிகளும் கண்டி ஊடாக திருகோணமலை சென்றடைந்து, அங்குள்ள பேருந்து தரிப்பிடத்தில் அமர்ந்திருக்கும் காணொளிக் காட்சி வெளியாகியுள்ளது.
மாணவிகள் திருகோணமலை பொலிஸ் நிலையத்தைத் தாண்டி இறங்கி, பின்னர் முச்சக்கர வண்டியில் சென்றதாகவும், பேருந்து நிலையத்தில் அவர்கள் இருப்பதை இனம்கண்ட நபர் ஒருவர் தங்களுக்குத் தகவல் வழங்கியதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்



