News

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தை காணவில்லை !!

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பம் ஒன்று காணாமல் போயுள்ளது

நேபாளம் மற்றும் திபெத் எல்லையில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கில் அகப்பட்டு, இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஆஸ்திரேலியக் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காணாமல் போயுள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 47 வயதான சந்திரசேகரன் முரளிதரன், அவரது மனைவியான 42 வயதான ஷைலஜா முரளிதரன் மற்றும் அவர்களின் மகன்களான அஷ்வின் (14), ஆருஷ் (11) ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

கைலாச மலைக்கான ஆன்மீகச் சுற்றுப்பயணத்தின் போது, நேபாள – சீன எல்லைக்கு அருகிலுள்ள ‘ரசுவாகாதி’ (Rasuwagadhi) பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் போது இக்குடும்பத்தினர் காணாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போன ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 43 ஆகும். நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளை உலுக்கிய இந்த வெள்ளப்பெருக்கில் பலியானோரின் எண்ணிக்கை 1,000-ஐத் தாண்டியுள்ளதுடன், சுமார் 4,000 பேர் வரை காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Recent Articles

Back to top button