News

ஜூன் இறுதியில் இலங்கையின் மொத்தக் கடன் 97 பில்லியன் டொலரைத் தாண்டியது

இந்த ஆண்டின் ஜூன் மாத இறுதியில் நாட்டின் மொத்த அரசாங்கக் கடன் 97,952 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 32,977 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக நிதி அமைச்சின் அரச கடன் மேலாண்மை அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அரசாங்கத்தின் மொத்தக் கடன் சேவை செலுத்துதல் சுமார் 2,700 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

நிதி அமைச்சின் அரச கடன் மேலாண்மை அலுவலகத்தின் புதிய அறிக்கையின்படி, 2026 ஜூன் 30 நிலவரப்படி இலங்கையின் மொத்த அரசாங்கக் கடன் 97,952 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 32,977 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதில் மத்திய அரசின் கடன் 95,047 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதில் உள்நாட்டுக் கடன் 57,039 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், வெளிநாட்டுக் கடன் 38,008 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் உள்ளடக்கியுள்ளது.

2026 ஜூன் இறுதியில் மத்திய அரசின் வெளிநாட்டுக் கடன் 38,008 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இதில் பன்முகக் கடன்கள் (Multilateral debt) 14,801.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள், வணிகக் கடன்கள் (Commercial debt) 12,409.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் இருதரப்பு கடன்கள் (Bilateral debt) 10,797.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அடங்கும்.

மொத்த பன்முகக் கடனான 14,801.6 மில்லியன் அமெரிக்க டொலர்களில், ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு 6,885.1 மில்லியன் அமெரிக்க டொலர்களும், உலக வங்கிக்கு 4,666.2 மில்லியன் அமெரிக்க டொலர்களும், சர்வதேச நாணய நிதியத்திற்கு 2,615.2 மில்லியன் அமெரிக்க டொலர்களும் சேர வேண்டியுள்ளது.

Recent Articles

Back to top button