News

NPP யின் 159 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வெல்லும் தெற்கு அமைப்பு (தினன தக்குன), தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.



பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, பாராளுமன்ற சிறப்புரிமைகளின் கீழ் வழங்கப்படும் கொடுப்பனவுகளை, பொதுமக்களின் நன்மைக்காகப் பயன்படுத்தாமல், ஜே.வி.பி (JVP) கட்சியின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்வதன் மூலம், குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமொன்றை இழைத்துள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.



இந்த முறைப்பாடு இன்று (02) காலை இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டது.



2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் துரித விசாரணையொன்றை முன்னெடுக்குமாறும் அந்த அமைப்பு கோரியுள்ளது.



தமது முறைப்பாட்டில், தினன தெக்குன அமைப்பு ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அவற்றில், NPPயின் 159 பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்து விசாரணை நடத்துதல், அத்துடன் கட்சியின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளும் அடங்குகின்றன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button