ஜனசேத பெரமுன கட்சியின் தலைவர் சீலரத்ன தேரர் மீது தா**க்*குதல் – காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

ஜனசேத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர், அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த நிலையில் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வீரகுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பத்தரமுல்ல சீலரத்ன தேரர், தற்போது வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இறுதிச் சடங்கு ஒன்றின் ஏற்பாடுகள் தொடர்பாக விகாரை வளாகத்துக்குள் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தைத் தொடர்ந்து, தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேகநபரை உடனடியாக கைது செய்வதற்காக வீரகுல பொலிஸார் பல விசேட பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தி தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கான சரியான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரகுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



