News

தம்பாளை கிராமத்தின் முதலாவது பெண் வைத்தியர்.                                                      Dr. மஹுருப் மஹீஸா   

                                                         ✍🏻 M.C.A. ஸமட்  JP                            

  ஒப்பிட்டு அளவில் எல்லாத் துறைகளிலும் நமது தம்பாளை மண் பிரகாசித்து வருவது இம்மண்ணை நேசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் பெருமைதான்.              அல்ஹம்துலில்லாஹ்.
பெண்கள் பலர் விஞ்ஞான துறையில் கல்வி கற்றாலும் வைத்திய துறைக்கு யாரும் தெரிவு செய்யப்படாத நிலையில் Mahurup Maheesha முதலாவது பெண் வைத்தியராக தெரிவு செய்யப்பட்டு தம்பாளை மண்ணிக்கும், பெற்றோருக்கும் விஷேடமாக தனது ஆரம்ப கல்வி முதல் MBBS வரையான கல்வி பயணத்தில் முழு மூச்சாக பல தியாகங்களோடும், விடாமுயற்சியோடும் தன்னை முழுமையாக அர்ப்பணித்த தாய் அஸ்மியா அவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும்,கல்வி கற்ற பாடாசாலைக்கும்பெருமை சேர்த்துள்ளார்.



மஹுருப் , அஸ்மியா தம்பதிகளின் மூத்த புதல்வியான மஹீஸா டொக்டர்  குருநாகல் மாவட்டம் Kiniyama என்ற ஊரை வசிப்பிடமாக கொண்ட சகோதறர் மொஹம்மட் பெரோஸ்  அவர்களின் மனைவியுமாவார்.

தம்பாளை பொ/அல் ஹிலால் முஸ்லிம்   மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 01 தொடக்கம் உயர் தரம் வரை கற்று புலமை பரிசில் பரீட்சையிலும் சித்தியடைந்து,
சாதாரண தரத்தில் சிறந்த (7A,1B,1C) பெறுபெறுகளைப் பெற்று உயர் தரத்தில் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்ற இவர் 1A,2B சித்தியுடன் (2018/19) பருவ காலத்தில் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவானார்.

பல்கலைக் கழக வைத்திய கற்கை நென்றியினை பூர்த்தி செய்து 2026.08.28 ம் திகதி முதல் பொலன்னறுவை போதானா வைத்திய சாலையில்  (Internship ) இணைப்பு செய்யப் பட்டுள்ளார்.

வைத்தியத்துறையில்  பெண்களின் பிரவேசம் அற்றிருந்த நிலையினை நிவர்த்தி செய்து தம்பாளையின் முதலாவது பெண் வைத்தியர் என்கின்ற வரலாற்றுப் பெருமையை தனதாக்கிக் கொண்டுள்ளார் டொகடர் மஹீஸா.

இவரது வருகைக்குப் பின்னர் இன்னும் பல பெண்பிள்ளைகள் இத்துறைக்குள்  காலடி எடுத்து வைத்து தற்போது பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று வருகின்றனர் என்பதும் நமது மண்ணிற்கு கிடைத்த பெருமைகளே…

Congratatulations.. Dr. Maheesa
“Our Thambala village is proud of you ”                                                                                                   MCA.Samad JP,MPS                                  லங்காபுர பிரதேச சபை உறுப்பினர்,                    தம்பாளை.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button