News

தெஹிவளை பாபக்கர் பள்ளிவாசல் 🕌 வழக்கு – மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணை



(கொழும்பு, 04.09.2026)

தெஹிவளை பாபக்கர் பள்ளிவாசல் தொடர்பான மீளாய்வு மனு CA/Rev/12/2024 நேற்று (03.09.2026) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசர்கள் M.C.B.Sமொராயஸ் மற்றும் டாக்டர் பிராங்க் H குணவர்தன ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மன்றில் 1, 2 மற்றும் 4 முதல் 8 வரையிலான மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகள் எம்.டி.என். டில்ஹாம் அவர்கள் ஆஜராகி சமர்ப்பணங்களை மேற்கொண்டார். 3ஆவது மனுதாரர் சார்பில் சட்டத்தரணி றுடானி ஸாஹிர் அவர்களுடன் சட்டத்தரணி ஜெனீப் பாஸி அவர்களும் ஆஜராகி தமது சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

மனுதாரர்களின் விண்ணப்பம் தொடர்பான முழுமையான சட்ட மற்றும் உண்மை நிலைமைகள் மனுதாரர்கள் சார்பிலான சட்டத்தரணிகளால் நீதிமன்றத்தில் விளக்கப்பட்டன.

இதன்போது, சர்ச்சைக்குரிய தெஹிவளை 74 பேர்ச்சஸ் காணி பள்ளிவாசல் அமைப்பதற்கும், அப்பகுதி மக்களின் மத மற்றும் சமூக நலனுக்குமான பயன்பாட்டிற்காக சவூதி அரேபியாவைச் சேர்ந்த பாபக்கர் என்பவரால் வக்ஃப் சொத்தாக அர்ப்பணிக்கப்பட்டதே அன்றி, தனிப்பட்ட சொத்தாக பயன்படுத்தவோ அல்லது கையகப்படுத்தவோ வழங்கப்படவில்லை என்பது நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மேலும், குறித்த வக்ஃப் சொத்தினை தனிப்பட்ட தர்ம நம்பிக்கையாக (Private Trust) மாற்றும் நோக்கில் பிரதிவாதிகள் பல்வேறு ஆவணங்களை நிறைவேற்றியுள்ளதாகவும், சவூதி பிரஜையான பாபக்கர் வழங்கியதாகக் கூறப்படும் அதிகாரப்பத்திரம் (Power of Attorney) அதன் முகத்தோற்றத்திலேயே செல்லுபடியற்றதாகவோ அல்லது புனையப்பட்ட ஆவணமாகவோ இருப்பதற்கான பலத்த சந்தேகங்கள் காணப்படுவதாகவும் மனுதாரர்கள் சார்பிலான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

3ஆவது மனுதாரர் சார்பிலான மேலதிக சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக 24.09.2026 மற்றும் 04.10.2026 ஆகிய திகதிகள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ளன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button