News
இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் ஒரு இலட்சத்து இருபதாயிரம் மெற்றிக் டொன் நிலக்கரியை காணவில்லை ; இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு ..
கடந்த மாதம் 29 ம் திகதி கிடைத்த கணக்கறிக்கைப்படி இலங்கைக்கு வந்ததாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக ஒரு இலட்சத்து இருபதாயிரம் மெற்றிக் டொன் நிலக்கரி கிடைக்கவில்லை என்பது அம்பலமாகியுள்ளதாக இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு.
இது தொடர்பில் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த நபர் நிலக்கரி ஊழல் தொடர்பிலான ஐந்தாவது முறைப்பாடு எனவும் ஆணைக்குழு விசாரணை செய்யாவிட்டாலும் முறைப்பாடு செய்வதை நிறைத்தப்போவதில்லை என கூறினார்.
குறித்த இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் நிலக்கரியை அனுர குமார விழுங்கிவிட்டாரா என முறைப்பாட்டாளர் கேள்வி எழுப்பினார்.



