News
லிற்றோ கேஸ் விலை அதிரடியாக குறைப்பு !

இன்று (05) முதல் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு உருளைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 12.5 கிலோகிராம் வீட்டு உபயோக எரிவாயு உருளையின் விலை 100 ரூபாயால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 4,365 ரூபாயாக குறைந்துள்ளது.
5 கிலோகிராம் எரிவாயு உருளையின் விலை 42 ரூபாயால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1,750 ரூபாயாக மாறியுள்ளது.
அதேபோல், 2.3 கிலோகிராம் எரிவாயு உருளையின் விலை 20 ரூபாயால் குறைக்கப்பட்டு, 815 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.



