News

நமக்குத் தெரியாமல் மத்திய கிழக்கில் ஒரு போர் நடக்கிறது.. நியாயமாகப் பார்த்தால் பொருட்களின் விலைகள் மேலும் உயர வேண்டும்.. – டில்வின்

70 ஆண்டுகளுக்கும் மேலாக சீரழிக்கப்பட்ட ஒரு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது ஒரு நீண்ட மற்றும் சவாலான பயணமாகும் என்றும், உலகில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும் அதன் சுமை நாட்டின் மக்களுக்குத் தெரியாத வகையில் செயற்பட தற்போதைய அரசாங்கம் முடிந்துள்ளது என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

பேருவலையில் நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பொதுச்செயலாளர்:

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை காரணமாக ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக கப்பல் கட்டணங்கள், காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், அரசாங்கம் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளை உயர்த்த அனுமதிக்காமல் அவற்றைக் கட்டுப்படுத்தியுள்ளது.

“வேறு அரசாங்கம் இருந்திருந்தால், இந்தப் போருக்கு மத்தியில் பெரிய சூதாட்டத்தை நடத்தி, இப்போது எண்ணெய் இல்லை, கேஸ் இல்லை என்று கூறி விலைகளை உயர்த்தியிருப்பார்கள். மக்கள் வரிசையில் நின்றிருப்பார்கள். எதிர்க்கட்சியினரும் இரண்டாவது ‘அரகலய’ (போராட்டம்) உருவாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் நமது அரசாங்கத்தின் கீழ் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட நாங்கள் அனுமதிக்கவில்லை. அதேபோல், எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளை படிப்படியாகக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறோம்,” என்று டில்வின் சில்வா கூறினார்.

இதுதவிர, அண்மையில் ஏற்பட்ட இயற்கை அசம்பாவிதங்கள் போன்ற சவால்களின்போதும் அரசாங்கம் மிகவும் திறம்பட தலையிட்டு மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கியதை அவர் நினைவுகூர்ந்தார்.

உலகில் நடக்கும் ஒரு போரின் தாக்கம் கூட மக்களுக்குத் தெரியாதவாறு நாட்டை ஆட்சி செய்ய முடிந்தது தற்போதைய அரசாங்கத்தின் சிறப்பான சாதனையாகும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Recent Articles

Back to top button