News
2032 ஆண்டாகும் போது புதிதாக 50 பல்கலைகழகங்களை நிர்மாணிக்கவுள்ளோம் !
2032 ஆண்டாகும் போது புதிதாக 50 பல்கலைகழகங்களை நிர்மாணிக்கவுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக கூறினார்.
புலத்சிங்கள கூட்டத்தில் நேற்று உரையாற்றிய ஜனாதிபதி இதனை கூறினார்.
கடந்த ஆண்டு 6 ம் வகுப்பிற்கான புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட இருந்தபோதும் அதில் இருந்த சில குறைபாடுகள் காணப்பட்டதால் அதனை அடுத்த வருடத்திற்கு பிற்போட்டுள்ளதாக அவர் கூறினார்.
2027 ஆண்டு 6 ம் வகுப்பு மாணவர்கள் 2032 இல் உயர்தரம் படித்து வெளியேறும் போது அவர்கள் கல்வி கற்ற 50 பல்கலை கழகங்கள் நிர்மாணிக்கப்படும் என அவர் கூறினார்.
கல்வித்துறையில் பாரிய மாற்றத்தை கொண்டுவருவதாக அவர் அங்கு உறுதிமொழி வழங்கினார்.



