News

6 ஆம் ஆண்டு கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படாததால் 27 கோடி ரூபாய் செலவு !

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் இந்த ஆண்டில் (2026) 6 ஆம் ஆண்டிற்கு நடைமுறைப்படுத்தப்படாததால், பழைய பாடத்திட்டத்தின் கீழ் பாடப்புத்தகங்களின் பிரதிகளை மீண்டும் அச்சிடுவதற்கு 27 கோடியே 82 லட்சத்து 10 ஆயிரத்து 186 ரூபாய் (278,210,186) செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள தணிக்கை அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

6 ஆம் ஆண்டிற்கான ஆங்கில வழி பாடத் தொகுதியில் (Module) உள்ளடக்கப்பட்ட ஒரு விபரம் தொடர்பான சிக்கலான சூழ்நிலைகள் காரணமாகவே புதிய கல்விச் சீர்திருத்தங்கள் 6 ஆம் ஆண்டிற்கு நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதன் காரணமாக பழைய பாடத்திட்டத்தின் கீழ் 21 லட்சத்து 545 (2,100,545) பாடப்புத்தகப் பிரதிகள் மீண்டும் அச்சிடப்பட்டிருந்தன.

இருப்பினும், 2026 ஆம் ஆண்டில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 6 ஆம் ஆண்டின் முதலாவது தவணைக்கான பாடத் தொகுதிப் பிரதிகள் 68 லட்சத்து 40 ஆயிரத்து 800 (6,840,800) அச்சிடப்பட்டிருந்தன. இதில் உள்ளடக்கம் சிக்கலுக்குரியதாக மாறிய ஆங்கில வழி பாடத் தொகுதிக்கான அச்சிடுதல் செலவு வீண் செலவாக மாறியுள்ளதாகவும் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

— லலித் சாமின்த

Recent Articles

Back to top button