News

“மக்களுக்கு எங்களை பிடிக்கவில்லை என்று கூறுவது பொய்… ஏமாறாதீர்கள்” – அமைச்சர் சுசில் ரணசிங்க

தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் விரைவில் வீழ்ச்சியடையும் என்றும் எதிர்க்கட்சியினர் மேற்கொண்டு வரும் பிரச்சாரம் எந்தவொரு அடிப்படையுமற்ற பொய்ப் பிரச்சாரமாகும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுசில் ரணசிங்க:

“இந்த நாட்டில் அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே தியாகங்களைச் செய்து, வேர்வை சிந்தி ஒரு மக்கள் அரசாங்கத்தை உருவாக்கியவர்கள் இந்த கிராமங்களில் வாழும் சாதாரண மக்கள்தான். எனவே, இந்த அரசாங்கம் மக்களுக்குச் சொந்தமானது. ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தோழர் பதவியேற்று வரும் 21ஆம் திகதியுடன் இரண்டு மாதங்கள் நிறைவடைகின்றன. அதனை முன்னிட்டு ஜனாதிபதி மக்களைச் சந்திக்கும் பேரணிகளின் தொடரை ஆரம்பித்துள்ளார். அண்மையில் கஹட்டகஸ்திகிலியவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலென்பிந்துனுவேவ பிரதேச சபை அதிகாரப் பிரதேசத்திலிருந்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

ஆனால், இன்றைக்கு எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை விட்டு மக்கள் விலகிச் செல்வதாகவும், மக்களுக்கு அரசாங்கத்தை பிடிக்கவில்லை என்றும், இன்னும் சில நாட்களில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நடந்ததே இந்த அரசாங்கத்திற்கும் நடக்கும் என்றும் சமூகத்தில் பரப்ப முயல்கின்றனர். எனினும், யதார்த்த நிலவரத்தை உணர்ந்து கிராமங்களுக்குச் சென்று பார்த்தால், இந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பதும், பிரதிநிதித்துவப்படுத்துவதும், அரசாங்கத்தின் உண்மையான பங்குதாரர்களாக இருப்பதும் நாட்டின் சாதாரண பொதுமக்கள்தான் என்பது தெளிவாக்கும்.

வரலாற்றில் முதன்முறையாக சாதாரண மக்களின் அரசாங்கம் ஒன்று இந்த நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் ராஜாக்களைப் போல ஆட்சி செய்த அமைச்சர்கள், ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இன்று ஒவ்வொருவராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID)ச் செல்வதை மக்கள் காணக்கூடியதாக உள்ளது.”

Recent Articles

Back to top button