News

அனோஜனை விடுதலை செய்யக் கோரி ஹட்டனில் கொட்டும் மழையிலும் கவனயீர்ப்பு போராட்டம் 🔹



சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞன் சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், மரண தண்டனையைக் குறைத்து, கருணை வழங்குமாறு கோரியும் “மனிதாபிமான வேண்டுகோள்” எனும் தலைப்பில் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இந்து அமைப்பின் ஒன்றியத்தினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.



கொட்டும்மழைக்கு மத்தியில் இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிவராசா அனோஜனின் புகைப்படம் தாங்கிய பதாகைகளையும் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியவாறு தமது கோரிக்கைகளை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button