பளு தூக்கும் போட்டியில் 123 கிலோகிராம் எடையினை தூக்கி திறமையை வெளிப்படுத்தி அசத்திய சனூஸ்

கிழக்கு மாகாண 50ஆவது விளையாட்டு விழா – பளுதூக்கலில் தம்பலகாமம் வீரர் இரண்டாம் இடம்
ஹஸ்பர் ஏ எச்
கிழக்கு மாகாணத்தின் 50ஆவது விளையாட்டு விழாவின் கீழ் நடைபெற்ற பளுதூக்கல் போட்டியில், தம்பலகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த எம். சனூஸ் சிறப்பாகப் போட்டியிட்டு இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.குறித்த போட்டித் தொடர் திருகோணமலையில் நேற்று (04.10.2026)இடம்பெற்றது. 123 கிலோகிராம் எடையினை தூக்கி மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். தம்பலகாமம் பிரதேச செயலாளர் திரு கே சதிசேகரன் அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க விளையாட்டு உத்தியோகத்தர் கே.எம் ஹாரிஸ் குறித்த வீரருக்கு திறம்பட தொடர் பயிற்சியளித்து வந்துள்ளார். இது தம்பலகாமம் பிரதேசக்கு வரலாற்று வெற்றியாக முதற் தடவையாக கருதப்படுகிறது.
மாகாண மட்டத்தில் நடைபெற்ற இப்போட்டியில் திறமையை வெளிப்படுத்திய சனூஸ், தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
தம்பலகாமம் பிரதேசத்திற்கு பெருமை சேர்த்துள்ள சனூஸுக்கு பிரதேச மக்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் நலன்விரும்பிகள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
—
Hasfar A Haleem BSW (Hons)
Journalist



