News
ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதால் தான் ஷாக் ஆகியுள்ளதாக ஐ. நா பொதுச் செயலாளர்அறிவிப்பு

சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூரமான தாக்குதலுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டெரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், பொதுமக்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களுக்கு முரணானவை என்றும், இதுபோன்ற தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



