News
சிரிலிய விவகாரத்தில் கைது செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தில் ஷிரந்தி ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த முன்பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்தது

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த முன்பிணை மனுவை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
‘சிரிலிய சவிய’ (Siriliya Saviya) கணக்கு தொடர்பான விவகாரத்தில், நிதிக்குற்றங்கள் விசாரணைப் பிரிவினால் (FCID) தாம் கைது செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தின் அடிப்படையில் அவர் இந்த முன்பிணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த 6ஆம் திகதி மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது, குறித்த விவகாரம் தொடர்பான உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிப்பதற்காக நிதிக்குற்றங்கள் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி இன்று (12) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.



