News

நிறுவனங்களிடமிருந்து 81 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டு – சாமர சம்பத் MP இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினாரால் கைது

வாக்குமூலம்  வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.



முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் தெரிவுசெய்யப்பட்ட 3 நிறுவனங்களுக்கு மாத்திரம் பொஸ்பேட் ஏற்றுமதி செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்தமை மற்றும் அந்நிறுவனங்களுக்குப் பொஸ்பேட் ஏற்றுமதிக்குத் தேவையான உரிமங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு உதவி புரிந்தமைக்காக, குறித்த நிறுவனங்களிடமிருந்து 81 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.



இதுதொடர்பில் இன்று வாக்குமூலம் வழங்க முன்னிலையாகியிருந்த  சாமர சம்பத் தசநாயக்க சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியிருந்த நிலையில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

சாமர சம்பத்  தசநாயக்க முன்னதாக கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகப் பதவியில் இருந்த காலத்தில் அவரது தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுமதிபால லியனாராச்சி என்பவரும் இந்த விசாரணைகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button