News
லக்விஜய மின் உற்பத்தி நிலையம் முழுமையான உற்பத்தித் திறனுடன் மீண்டும் செயற்படத் தொடங்கியது – இன்று முதல் மின்வெட்டை இடைநிறுத்ததீர்மானம்

லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி அலகு, 270 மெகாவாட் முழுமையான உற்பத்தித் திறனுடன் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக, இன்று (22) முதல் மின் தேவை முகாமைத்துவ நடவடிக்கைகள் அவசியமில்லை என தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் அறிவித்துள்ளார்.
குறித்த மின் உற்பத்தி அலகு முழுமையான திறனுடன் இயங்கத் தொடங்கியுள்ளதால், மின் தேவையை முகாமைத்துவம் செய்வதற்காக முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை இடைநிறுத்த முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது



