News

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு ஊழல் தடுப்பு பிரிவினர் பாய்ந்தனர்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகளைக் கண்டறிவதற்காக, வலான ஊழல் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட விசாரணைக் குழுவினர் குறித்த திணைக்களத்தின் கணினி அமைப்பின் முழுமையான தரவுகளைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை ஒன்றை நடத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினிப் பீடப் பேராசிரியர்கள், இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி (CERT) அதிகாரிகள், கௌடெக் (GovTech) இலங்கை மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நிபுணர்கள் ஆகியோர் இந்த விசாரணையில் இணைந்துள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button