News

அக்குறணை பிரதேச சபையின் சேவைக்கு தேசிய அங்கீகாரம்!

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/26 – அக்குறணை பிரதேச சபைக்கு விசேட பாராட்டு கிடைத்துள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்!

இது, அக்குறணை பிரதேச சபையின் சேவைத் திறன், நிர்வாக முகாமைத்துவம் மற்றும் மக்கள் சேவையின் தரம் ஆகியவற்றுக்காக முன்னெடுக்கப்பட்ட அர்ப்பணிப்பான செயற்பாடுகளுக்கு தேசிய மட்டத்தில் அங்கீகாரமாகும்.

2025/26 தேசிய உற்பத்தித்திறன் விருது விழாவில், அரச துறையின் உள்ளூராட்சி நிறுவனங்கள் பிரிவில் Special Commendation (விசேட பாராட்டுச் சான்றிதழ்) பெற்றுள்ளமை எம் அனைவருக்கும் பெருமகிழ்ச்சியளிக்கிறது.

இந்த வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சபை உறுப்பினர்கள், செயலாளர் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

குறிப்பாக, திட்வா புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களின்போது மீட்பு, நிவாரணம், ஒருங்கிணைப்பு, உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் கழிவு முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஒன்றிணைந்து செயற்பட்ட அனைவரையும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவுகூர்கின்றேன்.

எம்மீது நம்பிக்கை வைத்து தொடர்ச்சியாக ஊக்கமளிக்கும் அக்குறணை மக்களுக்கும் விசேட நன்றிகள். இது ஒரு முடிவல்ல; அக்குறணைக்கான எமது சேவையை மேலும் வினைத்திறனுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்வதற்கான புதிய ஊக்கமாகும்.

இஸ்திகார் இமாதுதீன்

அக்குரனை பிரதேச சபை தலைவர்

Recent Articles

Back to top button