News

மக்கள் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள இக்காலகட்டத்தில் எனக்கு மருத்துவக் காப்புறுதி வேண்டாம் – அந்த பணத்தை ஆதரவற்ற மக்களின் நலனுக்காக வழங்குங்கள் ; ரவி கருணாநாயக்க

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மருத்துவக் காப்புறுதி வசதியைத் தான் கௌரவபூர்வமாக நிராகரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, சபாநாயகருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்கள் பிரதிநிதிகள் முன்மாதிரியாகச் செயற்பட வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலான மக்கள் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள இக்காலகட்டத்தில், பொதுச் சேவைக்குத் தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்களுடன் ஒத்துழைப்புடனும் கரிசனையுடனும் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த மருத்துவக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் தனக்குக் கிடைக்கவுள்ள நிதி ஒதுக்கீட்டை, சட்ட ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் சாத்தியமான வழிமுறைகளின் ஊடாக, ஆபத்தான நிலையில் உள்ளவர்கள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள ஆதரவற்ற மக்களின் நலனுக்காக மீண்டும் ஒதுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button