News

மஹர பிரதேச சபைத் தலைவர் பதவியிலிருந்தும் உள்ளூராட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும் அத்துல களுஆராச்சி விலகல்!

மஹார பிரதேச சபைத் தலைவர் பதவியில் இருந்தும், தான் பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதியின் உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அத்துல களுஆராச்சி அறிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கம் ஊடாக விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர்,

இந்தத் தீர்மானம் எந்த வகையிலும் அவசரமாக எடுக்கப்பட்டதல்ல என்றும், பல ஆண்டுகளுக்கு முன்பு தனது கட்சியுடன் செய்துகொள்ளப்பட்ட அரசியல் உடன்படிக்கை மற்றும் பொறுப்புகள் குறித்த முழுமையான புரிதலுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியைத் தோற்கடித்து மக்கள் நலன்சார்ந்த ஆட்சியை அமைக்கும் நோக்கத்துடனேயே இந்த அரசியல் பயணத்தில் இணைந்ததாக நினைவுகூரும் அவர், 2024 செப்டம்பர் 21 அன்று அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றதன் பின்னர், நாட்டில் நிலையான அபிவிருத்திக்கான புதிய யுகம் ஆரம்பமாகியுள்ள சுட்டிக் காட்டுகிறார்.

மேலும், எதிர்காலப் பயணத்தை ஏற்றுக்கொள்வதற்குத் திறமையான இளைய தலைமுறையினரும் பலமான குழுவொன்றும் தற்போது உருவாகியுள்ளதால், தான் வகித்த பொறுப்புகளை புதிய தலைமுறைக்குக் கையளிப்பதற்கான பொருத்தமான பின்னணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

தனது தனிப்பட்ட தொழில் நடவடிக்கைகளையும் வாழ்க்கையையும் முறையாக நிர்வகிப்பதற்கு அதிக நேரத்தையும் கவனத்தையும் செலுத்தும் நோக்கத்துடனேயே இந்த இராஜினாமா மேற்கொள்ளப்பட்டதாகக் கூறும் அத்துல களுஆராச்சி, இது எந்த வகையிலும் அரசியல் நோக்கங்களைக் கைவிடுவது அல்லது மக்கள் சேவையிலிருந்து விலகுவதல்ல என்பதை மிகவலுவாக வலியுறுத்துகிறார்.

“பதவிகள் தற்காலிகமானவை என்றாலும், தாம் நிலைநின்ற நோக்கங்களும் மக்களுக்கான அர்ப்பணிப்பும் என்றென்றும் நிலைத்திருக்கும்” எனக் கூறியுள்ள அவர், இதுவரை தன் மீது நம்பிக்கை வைத்த அனைத்து மக்களுக்கும், சகோதரத்துவத்துடன் செயற்பட்ட சகாக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

Recent Articles

Back to top button