News
கட்டாய TIN சான்றிதழ் சமர்ப்பிக்கும் தேவையை 2027 ஏப்ரல் வரை ஒத்திவைத்தது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD)

இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD), குறிப்பிட்ட சேவைகள் மற்றும் பரிமாற்றங்களுக்கு கட்டாயமாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டிய வருமான வரி செலுத்துபவர் அடையாள இலக்க (TIN) சான்றிதழை வழங்குவதற்கான காலக்கெடுவை 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஒத்திவைத்துள்ளது.



