News

பெண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் இரகசியமாக துருக்கிக்குச் சென்ற சம்பவம் பதிவு

கெஸ்பேவ பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரியாகப் கடமையாற்றிய பெண் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், திணைக்கள அனுமதி இல்லாமல் இரகசியமாக துருக்கிக்குச் சென்ற சம்பவம் தொடர்பாக அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



குறித்த அதிகாரி கடந்த 3 ஆம் திகதி தனது கடமைகளை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளதுடன், மறுநாள் பொலிஸ் நிலையத்திற்குத் தொலைபேசி அழைப்பை எடுத்து, தான் நோய்வாய்ப்பட்டுள்ளதால் சேவைக்குச் சமுகமளிக்க முடியாது என அறிவித்துள்ளார்.



எனினும், அவர் தொடர்ச்சியாகச் சேவைக்குச் சமுகமளிக்காத காரணத்தினால், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்திய போது, சுகயீன விடுமுறையில் செல்வதாகக் கூறிய அவர் கடந்த 5 ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக துருக்கிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.



கடமையை அலட்சியம் செய்தல், திணைக்களத்தின் முன்னனுமதி ஏதுமின்றி இவ்வாறு சட்டவிரோதமாக வெளிநாடு சென்றதைக் கருத்திற்கொண்டு, அவருக்கு எதிராக இந்த ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button